வர்மா திரைப்படத்தில் இருந்து தாமே விலகியதாகவும் கருத்துசுதந்திர முரண்பாடு காரணமாக அந்த முடிவை எடுத்துள்ளதாகவும் பிரபல இயக்குனர் பாலா தெரிவித்துள்ளார். தயாரிப்பாளர் தரப்பு இந்த விடயம் தொடர்பில் தவறான தகவலை வெளியிட்டுள்ளதாகவும் பாலா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தரப்பட்ட தவறான தகவலால், இந்த விளக்கத்தை தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
படைப்பு சுதந்திரம் கருதி வர்மா படத்தில் இருந்து விலகிக் கொள்வது என்பது தான் மட்டுமே எடுத்த முடிவு என்றும் துருவ் விக்ரமின் எதிர்காலம் கருதி இதுகுறித்து மேலும் பேச விரும்பவில்லை என்றும் பாலா கூறியுள்ளார்.