Home இலங்கைதூக்கு மேடை தயார் செய்யப்படுகின்றது

தூக்கு மேடை தயார் செய்யப்படுகின்றது

by admin

 
போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி உறுதியாக அறிவித்துள்ள நிலையில், வெலிக்கடை சிறையின் தூக்கு மேடை தற்போது தயார் செய்யப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் தரத்தை உறுதிசெய்துகொள்வதற்காக தூக்கிலிடுவதற்குப் பயன்படுத்தும் கயிறு இலங்கை நியமனங்கள் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டளவில் பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்ட இந்த தூக்குக் கயிறு மரண தண்டனை வழங்கப்படுத்துவதற்கேற்ற தரத்தில் உள்ளதா என்பதை ஆராய்வதற்காகவே இவ்வாறு அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த கயிற்றின் தரத்தில் சிக்கல் காணப்படுமிடத்து உடனடியாக புதிய தூக்கு கயிற்றை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More