துபாயில் நடைபெற்ற உலக அரச உச்சி மாநாட்டில், அபுதாபியில் உலக வங்கியின் கிளை அலுவலகமம் திறப்பதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. துபாயில் நடைபெற்ற இந்த உலக அரசு உச்சி மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
அமீரக நிதித்துறை துணை அமைச்சர் ஒபைத் {ஹமைத் அல் தயார் மற்றும் உலக வங்கியின் மத்திய கிழக்கு பகுதிக்கான துணைத்தலைவர் பரித் பெல்கஜ் ஆகியோர் முன்னிலையில் அபுதாபி குளோபல் மார்க்கெட்டின் தலைமை செயல் அலுவலர் காலித் அல் சுவைதி மற்றும் உலக வங்கி வளைகுடா நாடுகளுக்கான இயக்குனர் இசாம் அபுசுலைமான் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இதன் மூலம் உலக வங்கியின் கிளை அலுவலகம் அபுதாபி குளோபல் மார்க்கெட்டில் விரைவில் திறக்கப்படும் எனவும் இந்த அலுவலகம் கொள்கை முடிவுகள் தொடர்பான ஆய்வுகள், அரசுத்துறைகளின் மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான தொழில்நுட்ப உதவியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு உதவியாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது