முத்தலாக் உள்பட 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அமைச்சரவை க் கூட்டம் நேற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற போது இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முத்தலாக் முறைக்கு எதிரான முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு, இந்திய மருத்துவ கவுன்சிலின் இடைக்கால கமிட்டி, கம்பெனிகள் சட்டத்தில் திருத்தம் மற்றும் நிதிநிறுவனங்கள், ஒழுங்குபடுத்தப்படாத வைப்புநிதி திட்டங்களை கட்டுப்படுத்தும் புதிய சட்டம் ஆகிய 4 அவசர சட்டங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இவை அனைத்து பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப்படாததால் காலாவதியாகிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.