Home இலங்கைபிள்ளையானின் விளக்க மறியல் காலம், மே 2 ஆம் திகதி வரை நீடிப்பு…

பிள்ளையானின் விளக்க மறியல் காலம், மே 2 ஆம் திகதி வரை நீடிப்பு…

by admin

File photo

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் மே மாதம் 02 ஆம் திகதி வரையில் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.  பிள்ளையான் தொடர்புடைய வழக்கு நேற்றைய தினம் நீதிமன்றில் மீளவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு அவரது விளக்கமறயில் நீடிக்கப்பட்டுள்ளது.

2015ம் ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகையன்று அப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்த சம்பவம் தொடர்பில் பிள்ளையான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த கொலை வழக்கு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலமானது சுயமாக வழங்கப்பட்டதா? அல்லது இல்லையா என்பது தொடர்பான கட்டளை வாக்குமூல விசாரணையின் போது குற்ற வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதாக தீர்மானிக்கப்பட்ட நிலையில் வழக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More