இலங்கை பிரதான செய்திகள்

குளத்திற்குள் காணப்பட்ட கசிப்பும் கோடாவும் மீட்பு

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

 

கிளிநொச்சி கண்டாவளை , பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள குமாரசாமிபுரம் குளத்திற்குளிருந்து ஒரு பரல் கோடாவும், ஐந்து கான் கசிப்பும்(42 போத்தல்) காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி மாவட்ட உதவி காவல்துறை அத்தியட்சர் ஜெயந்த ரத்நாயக்கவின் வழிகாட்டலில் கிளிநொச்சி மாவட்ட விசேட போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் காவல்துறையின அதிகாரி சத்துரங்க தலைமையிலான காவல்துறையினர் உத்தியோகத்தர்கள் இதனை மீட்டுள்ளனர்.

வாழ்வாதாரகத்திற்கு வழங்கப்பட்ட மீன் பிடி வள்ளம் ஒன்றை பயன்படுத்தி குளத்தின் நடுவில் மறைப்பு ஒன்றுக்குள் இச் சட்டவிரோத செயற்பாடு இடம்பெற்று வந்துள்ள நிலையில் குளத்திற்குள் நீந்திச் சென்று காவல்துறையினர் இவற்றை மீட்டுள்ளனர்.

அத்தோடு கிளிநொச்சி உதயநகர் மற்றும் கனகபுரம் பகுதிகளில் சட்டவிரோதமாக வெட்டப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 வேப்பம் குற்றிகளையும், 02 முதிரை குற்றிகளையும் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் சந்தேகத்தில் இருவரை கைது செய்துள்ளனர்.

 

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.