சிரியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பினர் பாலியல் அடிமைகளாக கடத்திச் சென்ற பெண்களில் 50 பேரை கொலை செய்துள்ளதாகவும் அவர்களின் தலைகள் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் குகைகளில் கண்டெடுக்கப்பட்டதாக பிரித்தானியாவின் விசேட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே பெண்களைக் கடத்திச் சென்று அவர்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்திய பின்னர் அவர்களைக் கொன்று தலைகளை குப்பைத்தொட்டியில் வீசியிருப்பதாக டெய்லி மெய்ல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்த நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது.
தோற்கும் தருணத்தில் இந்த அப்பாவிப் பெண்களை கோழைத்தனமாகக் கொன்று கொடூரமாக அவர்கள் தலைகளை ஐஎஸ் ஆங்காங்கே போட்டு விட்டுச் செல்கின்றது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ.எஸ். ராணுவம் ஐஎஸ் பயங்கரவாதிகள் மீது கடும் தாக்குதல் தொடுத்தபோது அவர்கள் நகரத்தின் அடியில் தோண்டி வைத்த குகைகளுக்குள் சென்று பதுங்கியுள்ளனர் எனவும் இன்னமும் கூட சாதாரண மக்களோடு மக்களாக ஒளிந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.