194
இலங்கையின் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜயசூரியவிற்கு இரண்டு வருடங்களுக்கு அனைத்து கிரிக்கெட் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் சட்டத்தின் இரண்டு சரத்துக்களை மீறியமைக்கு எதிராக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
சர்வதேச கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்புப் பிரிவினரின் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை, விசாரணைக்கு முன்னிலையாகவில்லை, விசாரணைக்கு தடைபோடுதல், ஆவணங்களை அழித்தல் போன்ற ஊழல் தடுப்புப் பிரிவின் கீழ் இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love