Home இலங்கைமுதலீட்டாளர்களுக்கும், புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கும் வதிவிட விசா…

முதலீட்டாளர்களுக்கும், புலம்பெயர்ந்த இலங்கையர்களுக்கும் வதிவிட விசா…

by admin

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கும், வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கையர்களுக்கும் நாட்டின் வதிவிட விசாவை வழங்குவதற்கு நேற்றைய தினம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இலங்கையில் 5 இலட்சம் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 10 வருடகாலமும் 3 இலட்சம் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யும் முதலீட்டாளர்களுக்கு 5 வருடகாலமும் இலங்கையில் வசிப்பதற்கான விசா அனுமதியும் வழங்கத் தீர்மானிக்கட்டுள்ளது.

அத்துடன் வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுக்கொண்டதனால் இலங்கை குடியுரிமையை இழந்துள்ளவர்களுக்கு அது தொடர்பான அமைச்சரினால் வழங்கப்படும் காலம் வரையில் நிரந்தரமாக வாழ்வதற்கான விசா அனுமதியை வழங்குவதற்காக 1948ஆம் ஆண்டு இலக்கம் 20 இன் கீழான குடிவரவு மற்றும் குடியகழ்வு சட்டத்தில் 14 (1) மற்றும் 14 (2) ஆகிய சரத்துக்களில் திருத்தத்தை மேற்கொள்ளுதல் 14(3அ) என்ற புதிய சரத்தை உள்வாங்குவதற்கான திருத்த சட்டம் சட்ட தயாரிப்பு பிரிவினால் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த திருத்த சட்ட மூலத்தை வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் அதன் பின்னர் பராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கும் உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சிகள் அமைச்சர் வஜிர அபேவர்தன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்pபடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More