இந்தியாவில் இருந்த பழைமையான தீவிரவாத இயக்கங்களில் ஒன்றான ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக, இந்திய மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
புல்வாமாவில் தீவிரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதனையயடுத்து காஷ்மீரில் உள்ள தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்துள்ள மத்திய அரசாங்கம் இவ்வாறு ஜமாத் – இ – இஸ்லாமி இயக்கத்தினை தடை செய்வதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை, இந்திய அரசாங்கம் நேற்று (28) விடுத்துள்ளது.
1941இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம், அரசியல் சார்ந்த இயக்கமென்றும் அபுல் அலா என்பவர் மூலம் தோற்றுவிக்கப்பட்டு இந்திய – பாகிஸ்தான் விடுதலைக்கு பின் இந்த அமைப்பு, தீவிர அமைப்பாக மாறியதாகவும், அதன்பின் அவ்வப்போது, இந்தியா மீது தாக்குதல் நடத்தி வந்ததாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்கள் முன் இந்த ஜமாத் – இ – இஸ்லாமி அமைப்பின் தலைவர் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர் குறிப்பிடத்தக்கது.