சர்வதேச காவற்துறையால், தங்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட, சர்வதேச சிவப்பு அறிவித்தலை நீக்குமாறு கோரி, மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோர் சர்வதேச காவற்துறையிடம் முன்வைத்த மேன் முறையீடு நிராகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் இன்டர்போல் எனும் சர்வதேச காவற்துறையின் மேன்முறையீட்டுச் சபை இந்த மேன் முறையீடுகளை நிராகரித்துள்ளதாக இலங்கை காவற்துறைத் தலைமையக தகவல்கள் தெரிவித்தன.
இது தொடர்பில் குற்றப் புலனய்வுப் பிரிவு பணிப்பாளரின் கீழ் இயங்கும் சர்வதேச காவற்துறைக் கிளைக்கு, சர்வதேச காவற்துறையினர் எழுத்து மூலம் அறிவித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.