186
சக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பேய் மாமா’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. சிலகாலம் நடிக்காதிருந்த வடிவேலு ஒரு முழுநீளநகைச்சுவைத் திரைப்படம் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். சக்தி சிதம்பரம் இயக்கும் இந்த படத்துக்கு ‘பேய் மாமா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலோடு வடிவேலு இருக்கும் சுவரொட்டி ஒன்றும் வெளியாகியுள்ளது. எனினும் குறித்த சுவரோட்டி பொய்யானது என பின்னர் செய்தி வெளியிடப்பட்டது. எனிகும் வடிவேலுவின் புதிய திரைப்படம் ஒன்று வெளிவரவுள்ளது. விரைவில் சக்தி சிதம்பரம் வடிவேலு இணையும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வரலாம்.
இருவரும் ஏற்கனவே இணைந்த என்னம்மா கண்ணு, காதல் கிறுக்கன், இங்கிலீஷ்காரன், வியாபாரி படங்களின் நகைச்சுவைப் பகுதிகள் இன்னும் பேசப்படுகின்றன என்பதால் இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Spread the love