181
மட்டக்களப்பில், ‘நுண்கடனிலிரு
மட்டக்களப்பு அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் ஏற்பாட்டில் காந்தி பூங்காவிற்கு முன்றலில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இதில் பெண்கள் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தின் முடிவில் மாவட்ட அரசாங்க அதிபர் காரியலத்திற்கு சென்ற பெண்கள் குழுவினர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
தற்போதைய நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான பெண்கள் அதிக வட்டியுடனான நுண்கடன் திட்டங்களில் கடன்களை பெற்றுள்ளதாகவும் இதனால் கடன் சுமை அதிகரித்து குடும்ப சீரழிவுகளும் பெண்களின் தற்கொலைகளும் அதிகரித்து வருவவதாகவும் அந்த மகஜரில் கூறப்பட்டுள்ளது.
இவற்றைக் கருத்திற் கொண்டு அரசினால் நுண்கடன்களை அடிப்படையாகக் கொண்டு இம்முறை 2019 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் பல நன்மையான விடயங்களை உள்ளடக்கியுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
முக்கியமாக இத்திட்டங்களை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நுண்கடனினால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் இனம் காணப்பட்டு அவர்களுக்கும் இத்திட்டங்களின் மூலம் நன்மை கிடைக்க வேண்டும் எனக் கோரி மகஜர் ஒன்றை மாவட்ட அரசாங்க அதிபர் முப. உதயகுமாரிடம் மக்கள் கையளித்துள்னனர்.
Spread the love