171
இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய முகாமையாளராக அசந்த டி மெல் நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் போது அவர் இலங்கை அணியின் முகாமையாளராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசந்த டி மெல் தெரிவுக் குழுவின் தலைவராக அண்மையில் இடம்பெற்ற தேர்தலில் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
Spread the love