இலங்கை மற்றும் அவுஸ்திரேலியாவுக்கிடையில் பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ஒரு வார காலம் இடம்பெறவுள்ள இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சொந்தமான நான்கு கப்பல்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்பெரா மற்றம் நியூகாசெல் ஆகிய இரண்டு கப்பல்கள் கொழும்புத் துறைமுகத்திற்கும் வேறு இரண்டு கப்பல்கள் திருகோணமலை துறைமுகத்திற்கும் வரவுள்ளதுடன் அவுஸ்திரேலியாவின் சுமார் 10 ஆயிரம் முப்படை வீரர்கள் இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு வேலைத்திட்டத்தில் பங்கு கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் இலங்கையில் முப்படையினருடன், மனிதநேய சேவைகள், அனர்த்தமுகாமைத் சேவைகள், கடல்வள பாதுகாப்பு, அமைதி காக்கும் வேலைத் திட்டங்கள் பலவற்றில் ஈடுபடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது