Home இலங்கை புலிகள் வேண்டுமென்ற விஜயகலாவுக்கு ஒரு சட்டம்? ஞானசாரருக்கு இன்னொரு சட்டமா?

புலிகள் வேண்டுமென்ற விஜயகலாவுக்கு ஒரு சட்டம்? ஞானசாரருக்கு இன்னொரு சட்டமா?

by admin

புலிகள் வேண்டும் என கூறிய விஜயகல மகேஸ்வரன் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் பௌத்த வாதம் பேசிய ஞானசார தேரர் சிறைக்கு செல்லவேண்டியேற்பட்டுள்ளது என எதிர்க்கட்சி உறுப்பினர் உதய கம்மன்பில சபையில் தெரிவித்துள்ளார். .

புத்தசாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சி,வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

பௌத்தத்திற்கு மட்டுமே முன்னுரிமை இருக்கும் என பிரதமரும், சபை முதல்வரும் தெரிவித்திருந்த போதிலும் இன்று அதற்கான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை எனவும் அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் ஒரே மட்டத்துக்கு கொண்டுவருவதன் முகமாக பௌத்தத்திற்கு இதுவரை கொடுத்த முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளர்h.

அரசியல் அமைப்பில் 9 ஆம் உறுப்புரிமை ஒருபோதும் மாற்றப்படாது என கூறி, மகாநாயக தேரர்கள் முன்னிலையில் மண்டியிட்டு கூறிவிட்டு, இன்று கைகளையும், கால்களையும், தலையையும் நுழைத்து அரசியல் அமைப்பினை மாற்றும் நிலைமை உருவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தசாசன அமைச்சருக்கோ அல்லது பிரதமருக்கோ அரசியல் அமைப்பில் பௌத்தத்திற்கான முன்னுரிமையை மாற்றியமைக்க அவசியம் இல்லையென்றாலும் கூட நிழல் பிரதமர் சுமந்திரனுக்கு இவற்றை மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் அவரிடம் இருந்து பௌத்தத்தை பாதுகாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எனவே அரசியல் அமைப்பின் 9 ஆம் உறுப்புரிமையை மாற்றக்கூடாது என அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாகவும் இன்று பௌத்த முக்கியத்துவம் அழிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பௌத்தர்கள் இந்த நாட்டில் எங்கு வேண்டுமானாலும் தமது மத நடவடிக்கைகளை அனுஷ்டிக்க முடியும் என்றபோதும் வடக்கு கிழக்கில் அவ்வாறு நடக்கவில்லை என்றும் சாம்பூர் பௌத்த சில உடைக்கப்பட்ட சம்பவம் இதற்கு நல்லதொரு உதாரணம் என்றும் கூறிய அவர, குற்றவாளிகள் தப்பித்துக்கொண்டுள்ளதாகவும் இந்த நிலைமை மேலும் தொடர்ந்தால் இந்த நாட்டில் பிரதான பௌத்த பகுதிகளே அழிக்கப்படும் நிலைமை உருவாகும் என்றும் உதய கம்பன்பில கூறினார்.

மன்னர் நீதிமன்றத்திற்கு கல் வீசக்கூறிய நபர் இன்று அரசாங்கத்தில் அமைச்சரவையில் உள்ளதாகவும் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என கூறிய விஜயகலா எம்.பி இன்று அரசாங்கத்தில் அமைச்சு பதவியில் உள்ளதாகவும் கூறிய அவர், நாட்டில் பௌத்த வாதம் பேசிய ஞானசார தேரர் இன்றும் சிறையில் உள்ளதாகவும் ஞானசார தேரருக்கு செயற்பட்ட சட்டம் ஏன் விஜயகலா விடயத்தில் செயற்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

அத்துடன் தமிழ் பிரிவினைவாதிகள் வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழர் பகுதிகள் என கூறுவதாகவும் உலகம் முழுவதும் தமிழ் பிரிவினைவாதிகள் இந்த கருத்துக்களை பரப்பி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடக்கில் பௌத்தம் பலமாக இருந்தது என்றும் அது சான்றுகளில் நிருபிக்கப்பட்டுள்ளபோதும் அதனை வடக்கு நிராகரித்து வருவதாக கூறிய அவர், இதற்கு முழு மூச்சாக செயற்பட்டது வடக்கின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் என்றும் தெரிவித்தார்.

வேலை செய்யத்தெரியாத தமது இயலாமையை மறைத்துக்கொள்ள முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் வடக்கில் பௌத்த நிராகரிப்பை கையில் எடுத்துள்ளதாகவும் தொல்பொருளியல் திணைக்களம் வடக்கில் எந்த பாதுகாப்பு நடடிக்கையையும் முன்னெடுக்க முடியாத நிலைமை இருந்தது. ஆகவே இவர்கள் பௌத்தத்தை அழிக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More