குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கஞ்சா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இருவர் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினர் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் சிரேஸ் காவல்துறை அத்தியட்சகரின் கீழான சிறப்புக் குற்றத்தடுப்புப் பிரிவினரின் சுற்றுக்காவல் நடவடிக்கையின் போதே இருவரும் கைது செய்யப்பட்டனர் என காவல்துறையினா குறிப்பிட்டனர்.
‘ஒருவரிடமிருந்து 4 கிராம் 120 மில்லிக்கிராம் கஞ்சா போதைப்பொருளும் மற்றவரிடமிருந்து 400 மில்லிக்கிராம் கஞ்சா போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபர்கள் 34 மற்றும் 42 வயதுடையவர்கள். சந்தேகநபர்கள் இருவரும் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர்’ எனவும் காவல்துறையினா தெரிவித்தனர்.