இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு – புத்தளம் பிரதான வீதியில் விபத்து- நால்வர் பலி :


கொழும்பு – புத்தளம் பிரதான வீதியின் நாகவில்லு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த வான் ஒன்றின் மீது எதிர்திசையில் வந்த டிப்பர் ரக வாகனம் ஒன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இன்று (18) அதிகாலை 1.45 மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த விபத்தில் வானில் பயணித்த மூவரும் பாதையில் பயணித்துக் கொண்டிருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளனர். அத்துடன் வானில் பயணித்த 8 பேர் மற்றும் பாதையில் பயணித்த ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் புத்தளம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap