157
போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி இன்று முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் காரணமாக கிழக்கு மாகாணம் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது.
மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் தமிழ்ப் பிரதேசங்களில் பாடசாலைகளுக்கு மாணவர்கள் சமுகமளிக்கவில்லை. அத்துடன், அரச அலுவலகங்கள், அரச, தனியார் வங்கிகளும் இயங்கவில்லை. மேலும், வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுவதுடன், பாதுகாப்புக் கடமைகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, இலங்கை அரசுக்கு எதிராக சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பு நகரில் மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
Spread the love