Home சினிமாகன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ்

கன்னிராசி படத்திற்கு ‘யு’ தணிக்கையில் சான்றிதழ்

by admin


விமல், வரலட்சுமி நடித்துள்ள ‘கன்னிராசி’ திரைப்படத்திற்கு யு தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  இந்தத் திரைப்படத்தை முத்துக்குமரன் இயக்கியுள்ளார்.

விமல் நடித்த  ‘கன்னிராசி’ திரைப்படத்தில் நாயகியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். அத்துடன் இத் திரைப்படத்தில் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், ஷகிலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முத்துக்குமரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More