Home உலகம் முகப்புத்தக பயனர்களின் கடவுச்சொற்கள், மிகச் சுலபமாக அணுகும் வகையில் காணப்பட்டன…

முகப்புத்தக பயனர்களின் கடவுச்சொற்கள், மிகச் சுலபமாக அணுகும் வகையில் காணப்பட்டன…

by admin

மில்லியன் கணக்கான முகப்புத்தக பயனர்களின் கடவுச்சொற்களை அந்நிறுவனத்தில் பணியாற்றும் 20,000 ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகப்புத்தக நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநரான பிரையன் கிரெப்ஸ் முதலில் சுட்டிக்காட்டியுள்ளார். 2012-ம் ஆண்டிலிருந்து இவ்வாறு கடவுச்சொற்கள வெளியாகியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

முகப்புத்தகத்தினைப் பயன்படுத்தும் 600 மில்லியன் பயனாளர்களின் கடவுச் சொற்கள் வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

முகப் புத்தக நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, பிரையன் இந்த பாதுகாப்பு குறைபாடு குறித்து விரிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
எனினும் இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முகப்புத்தக நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் ஏற்பட்ட குறித்த கோளாறு ஒன்றை சரி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More