Home இலங்கைமுழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது

முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது

by admin

முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது என மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி – பிரதமரை இணைத்துக்கொண்டு ஒரு தேசிய பொறிமுறையை அமைத்து கொடுக்கப்பட்ட கால அவகாசத்துக்குள் தீர்வுகளை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும். அதுவே இலங்கையை, சர்வதேச அழுத்தங்களில் இருந்து விடுவிக்கும் என எதிர்க்கட்சி உறுப்பினர் மகிந்த சமரசிங்க  சபையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், ஒவ்வொரு தடவையும் அரசாங்கமாக தாம் ஜெனிவா சென்று அங்கு வாக்குறுதிகளை கொடுத்து, சர்வதேச பிரேரணைகளை ஏற்றுக்கொண்டு இலங்கை வந்து அனைத்தையும் மறந்துவிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

முழுமையாக அனைத்தையும் கைவிட்டு ஒரு நாடாக செயற்பட முடியாது. இந்த பிரச்சினைகளை தீர்க்க ஒரு சரியான பொறிமுறையை இலங்கை உருவாக்கவில்லை என்பதே நாட்டின் பலவீனமானக அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக இலங்கை வாக்குறுதிகளை மட்டுமே கொடுத்து வருகிறது அடுத்த தடவை மீண்டும் ஜெனிவா சென்றவுடன் நெருக்கடியை சந்திக்க இதுவே காரணமாக அமைந்துள்ளது எனவும் எடுத்துக் கூறியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More