Home இலங்கைநகைகளை கொள்ளையடித்த, இரு இந்தியர்கள் கைது..

நகைகளை கொள்ளையடித்த, இரு இந்தியர்கள் கைது..

by admin

யாழ். ஊர்காவற்துறை – கரம்பன் பகுதியில் புடவை விற்க சென்று வீட்டிலிருந்த நகைகளை கொள்ளையடித்த இரு இந்தியர்களை ஊா்காவற்றுறை காவற்துறையினர்   கைது செய்துள்ளனா்.

குறித்த இரு இந்தியா்களும் கரம்பன்- நாரந்தனை பகுதியில் புடவை வி யாபாரத்திற்காக சென்ற நிலையில் வீட்டில் தனிமையில் இரு ந்த பெண்களின் நகைகளை அபகாித்துக் கொண்டு ஓடியுள்ளனா்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் மண்டைத்தீவு பொலிஸ் காவல் அரணுக்கு பொறுப்பான உப காவற்துறைப் பரிசோதகர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினருக்கு அறிவித்தனர்.

இதனடிப்படையில் ஊர்காவற்றுறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரி வீரசேகரவின் ஆலோசனைக்கு அமைவாக கொள்ளையடித்த நகைகள் பொருள் களுடன் யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற இருவரையும் காவற்துறையினர்    கைது செய்தனர்.

குறித்த நபர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள், வங்கி அட்டைகள், கடவுச்சீட்டுகள், கடவுள் விக்கிரகங்கள் இந்திய நாணயங்கள் ஓலை சுவடிகள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More