Home இலங்கை அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கெதிரான பிரேரணை நிறைவேற்றம்…

அருவக்காட்டில் குப்பை கொட்டும் திட்டத்திற்கெதிரான பிரேரணை நிறைவேற்றம்…

by admin

கொழும்பு குப்பைகளை, புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் வனாத்திவில்லு பிரதேச சபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

வன்னாத்தவில்லு பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வு நேற்றையதிம் தலைவர் சமந்த முனசிங்க தலைமையில் சபா மண்டபத்தில் இடம்பொற்ற போதே இவ்வாறு பிரேரணை, ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு எதிராக, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் ஏ.எம்.எம்.அனஸ்தீன் சமர்பித்த பிரேரணை, விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு திறந்த வாக்கெடுப்பு இடம்பெற்றது.

இதன்போது பிரேரணைக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் 6 பேர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் நால்வர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் தலா ஒவ்வொருமாக 14 உறுப்பினர்கள் வாக்களித்திருந்ததுடன், நால்வர் நடுநிலை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More