Home உலகம் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

உலகிலேயே மிகநீளமான உப்பு குகை இஸ்ரேலில் கண்டுபிடிப்பு

by admin

இஸ்ரேலில் உலகிலேயே மிகநீளமான உப்பு குகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு மால்கம் என பெயரிடப்பட்டுள்ளது. சாக்கடல் எனப்படும் டெட் சீயை ஒட்டி தென் மேற்கு மூலையில் இது அமைந்துள்ள இந்த குகை சோடாம் என அழைக்கப்படும் மலையை ஒட்டி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது சுமார் 10 கி.மீற்றர் நீளமான இந்த குகைக்குள் உப்பு படிகங்கள் அதன் கூரைப்பகுதியான மேற்பரப்பில் தொங்குவதுடன் குகையின் சுவர்களில் படிந்து காணப்படுவதாகவும் அதில் இருந்து உப்புநீர் சொட்டு சொட்டாக கசிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஹீப்ரோ பல்கலைக்கழகத்தின் குகை ஆராய்ச்சி மைய நிறுவனரும், இயக்குனருமான அமோஸ் புரூம்கிம் தலைமையிலான குழுவினர் கடந்த 1980ம் ஆண்டுகளில் இவற்றை கண்டுபிடித்திருந்ததுடன் தற்போதுள்ள பகுதியில் இருந்து 5 கி.மீ பரப்பளவுக்குள் இருக்கும் என அவர்கள் கணக்கிட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More