தேர்தலைக் காரணம் காட்டி இணையம் மூலமான மணல் விற்பனைக்கு விதித்துள்ள தடையை நீக்குமாறு தேர்தல் ஆணையகத்துக்கு தமிழ்நாடு மணல் லொரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் திகதி தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளதனால், தேர்தல் ஆணையகம் கடந்த 22ஆம் திகதி முதல் இணையம் மூலமான மணல் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நேற்றையதினம் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து இது குறித்த கடிதத்தினை கையளித்துள்ளார்
இதனால் மணல் லொரி உரிமையாளர்களும், அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனால் இணையம் மூலமான மணல் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து, மீண்டும் பணியைத் தொடங்க தேர்தல் ஆணையகம் அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.