198
தற்போது நிலவும் கடும் வறட்சியின் காரணமாக புத்தளம் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெரும் தொகையான மக்கள் மிக போசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் 15,829 குடும்பங்களைச் சேர்ந்த 56,105 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மாவட்டத்திலேயே மிகக் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு 7,795 குடும்பங்களைச் சேர்ந்த 27,901 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என இடர்முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் 7,350 குடும்பங்களைச் சேர்ந்த 25,296 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவுமம் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love