தமிழகத்தில் இதுவரை 208. 55 கோடி ரூபா பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக இந்தியத் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது. மக்களவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ள நிலையில், வாக்காளர்களுக்குப் பணம், பரிசுப் பொருள்கள் வழங்குவதைத் தடுக்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருவதுடன் வருமான வரித் துறையினரும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் தமிழகத்தில் வாகன தணிக்கையில், இதுவரை 208.55 கோடி மதிப்பிலான பணம்;, மதுபானம், தங்க, வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என இந்தியத் தேர்தல் ஆணையகம் நேற்றையதினம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில மொத்தம் 509.92 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது எனவும் குஜராத்தைத் தொடர்ந்து 208.55 ரூபா பறிமுதல் செய்யப்பட்டு தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.