இலங்கையில் நீதி நிலைநாட்டப்பட்டு பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் பொதுச்சபையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் ஜெரெமி ஹன்ட் இதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர் காணப்பட்டதை விட நல்லநிலை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர், எனினும் இடம்பெற்ற தவறுகளிற்காக நீதி வழங்கப்படாத பட்சத்தில் பொறுப்புக்கூறப்படாத பட்சத்தில் நிரந்தர சமாதானம் ஒருபோதும் நிலவாது என சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை பொதுச்சபையில் உரையாற்றியவேளை ஆசிய பசுவிக்கிற்கான பிரித்தானிய அமைச்சர் மார்க்பீல்ட் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய தீர்மானத்திற்கு இலங்கை இணை அணுசரனை வழங்கியதை பாராட்டியுள்ளார்.
சாதகமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நாங்கள் வரவேற்கும் அதேவேளை மிகவும் வேகமான முன்னேற்றம் அவசியம் எனவும் மார்க்பீல்ட் தெரிவித்துள்ளார் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் குறித்த தங்கள் கடப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுமாறு இலங்கையை கேட்டுக்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் இந்த நிலையில் இலங்கையில் உண்மையான முன்றேம் ஏற்படுவதை பார்ப்பதற்கு பிரித்தானியா ஆவலாக உள்ளது எனவும் மார்க்பீல்ட் குறிப்பிட்டுள்ளார்.