144
தமிழ்நாட்டின் ஆதிச்ச நல்லூரில் கண்டுபிடிக்கப்பட்ட அகழ்வுகள் பத்தாம் நூற்றாண்டை சேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காபன் பகுப்பாய்வு செய்யப்பட்ட பொருள்களின் காலம், கி.மு 905 மற்றும் கி.மு 971 என இந்திய மத்திய அரசு கூறியுள்ளது.
அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் காலத்தை, காபன் பகுப்பாய்வு செய்து மதுரை நீதிமன்றத்தில் இந்திய மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சி முடிவுகளின் அறிக்கை வெளியிடப்படாத நிலையில் இருந்தது.
இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் மீண்டும் அகழ்வாராய்ச்சி நடத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தமிழகத்தின் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ் என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆதிச்சநல்லூர் அறிக்கையை சமர்ப்பிக்கச் சொல்லி உத்தரவிட்டனர். இந்நிலையில், ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் சிலவற்றை கார்பன் பகுப்பாய்வுக்கு அனுப்பியிருந்தது மத்திய அரசு. அதன் ஆய்வு முடிவைத் தற்போது நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது மத்திய அரசு.
ஆய்வு முடிவின் அடிப்படையில் ஆதிச்சநல்லூரில் யார் அகழாய்வு செய்ய வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். அத்துடன் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசு அல்லது மாநில அரசில் யார் ஆய்வு நடத்தவிருக்கிறார்கள் என்பதைத் தொல்லியல் துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக கிடப்பில் கிடந்த ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியின் முழு அறிக்கையை விரைவில் வெளியிட வேண்டும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ‘ஆதிச்சநல்லூர் ஆய்வறிக்கையை விரைவில் சமர்ப்பிக்க வேண்டும்’ என்று நீதிமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
Spread the love