ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியை வென்றுள்ளது.
ஐதராபாத் ராஜிவ் காந்தி மைதானத்தில் நேற்றிரவு ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தலைவர் புவனேஷ்வர் குமார் முதலில் களத்தடுப்பினை தெரிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ஓட்டங்களை எடுத்துள்ளது.
இதனையடுத்து 137 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி 96 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தநிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 40 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியுள்ளது.
மும்பை அணியில் சிறப்பாக பந்து வீசிய அல்ஸாரி 3.4 ஓவரில் 12 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இதேவேளை இன்று இரவு ஜெய்ப்பூர் சவாய் மான் சிங் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் மெற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் போட்டியிடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது