Home இலங்கைகுண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

by admin


நாட்டில் நேற்றையதினம்  8 இடங்களில்  இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக  காவல்துறை ஊடகம் தெரிவித்துள்ளது. குறித்த இருவரும் தம்புள்ளை நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் காத்தான்குடி மற்றும் மாவனல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் காவல்துறை ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதேவேளை குறித்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நேற்றையதினம் கைது செய்யப்பட்ட இவர்கள் தற்போது குற்றப்புலனாய்வு திணைகளத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More