Home இலங்கைநீர்கொழும்பில் தங்கியிருந்த, 600 பாகிஸ்தான் பிரஜைகள், இடம் மாற்றப்பட்டுள்ளனனர்.

நீர்கொழும்பில் தங்கியிருந்த, 600 பாகிஸ்தான் பிரஜைகள், இடம் மாற்றப்பட்டுள்ளனனர்.

by admin


நீர்கொழும்பு காவற்துறைப் பிரிவில் தங்கியிருந்த பாகிஸ்தானில் இருந்து அனுப்பப்பட்ட பாகிஸ்தான் பிரஜைகள் 600 பேர் நிட்டம்புவ காவற்துறைப் பிரிவுக்குட்பட்ட அஹமதிய்யா நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது. பாகிஸ்தானில் காணப்படுகின்ற யுத்த சூழ்நிலை காரணமாக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் அவர்கள் இலங்கைக்கு நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதலை தொடர்ந்து குறித்த குழுவினர் நீர்கொழும்பில் தங்கியிருந்த வீடுகளில் இருந்து வௌியேறுமாறு அந்தந்த வீட்டு உரிமையாளர்கள் கூறியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பாகிஸ்தான் நாட்டவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் எழுந்துள்ளதாக நீர்கொழும்பு காவற்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். #pakistan people #pakistan refugees #EasterSundayAttackLK

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More