Home இலங்கைகிளிநொச்சி பாடசாலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவதற்கு இன்றைய அதிபர்களுடனான கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது என கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ம் திகதி இரண்டாம் தவணைக்காக பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ள உள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்பு செயற்பாடுகள் தொடர்பான விசேட கூட்டம் இன்று (26)கிளிநொச்சியில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் கிளிநொச்சி கல்வி வலயத்தில் பாடசாலைகளிலு ஏ9 மற்றும் ஏ32 வீதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது என்றும், பாடசாலை ஆரம்பிப்பதற்கு முன் இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதோடு, சுற்றுக்காவல் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுப்பவடுவார்கள் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளதோடு,

முதுகில் காவுகின்ற புத்தக பைகளை மாணவர்கள் பாடசாலைகளுக்கு கொண்டுவருவதனை தற்காலிகமாக நிறுத்துமாறும், பாடசாலைகளில் காலை பிரார்த்தனைகளை வழமையாக மேற்கொள்வது போன்று மேற்கொள்ளாது வகுப்பறைகளை மேற்கொள்வதற்கும் , பாடசாலை நேரங்களில் பெற்றோர் உட்பட எவரும் பாடசாலை வளாகத்திற்குள் செல்ல முடியாது என்றும், அத்தோடு பாடசாலை விடுகின்ற போது ஒரே நேரத்தில் மாணவர்களை வெளியில்விடாது வகுப்பு வகுப்பாக வெளியில் விடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் குறித்த விசேட கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது, குறித்த விசேட கூட்டத்தில் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபர், கிளிநொச்சி படைகளின் கட்டளை அதிகாரி சார்பில் 57வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கிளிநொச்சி வலய கல்வி பணிப்பாளர், அதிபர்கள் என ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிளிநாச்சி மாவட்டத்தில் 104 பாடசாலைகளில் 32800 மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர். பாடசாலைகள் திறந்து விடப்பட்டதன் பின்னர் மாணவர்கள் அச்சமின்றி கல்வினை தொடரும் வகையில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பிலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது

 

#kilinochchi #schools # policesecurity

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More