இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாமல் செய்வதற்காக எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ரொயிட்டர்ஸ் சர்வதேச செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குடிமக்களைக் கண்காணித்தல் மற்றும் புலனாய்வு சேவையை மீண்டும் கட்டியெழுப்புவதன் மூலம் இஸ்லாமிய தீவிரவாதம் பரவதை நிறுத்த முடியும் என அவர் குறித்த செவ்வியில் தெரிவித்துள்ளார்
ஏதிர்வரும் டிசம்பர் மாதமளவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் நூறு சதவீதம் தான் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் கலிபோனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு தொடர்பில் கருத்து வெளியிட்டுள் கோத்தாபய ராஜபக்ஸ அது அடிப்படையற்றது என்ற போதிலும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிப்பதற்கு சிறிய தடையாக அமையலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை அமெரிக்க அதிகாரிகள் தனது குடியுரிமையை நீக்குவார்கள் எனவும், அது வெகு விரைவில் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
தான் வெற்றிபெற்றால் இஸ்லாமிய அடிப்படைவாத அச்சுறுத்தலை இல்லாமல் செய்து பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பதே தனது முதன்மை நோக்கமாகும் எனத் தெரிவித்துள்ள கோத்தாபய ராஜபக்ஸ தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கவில்லை எனவும் இன நல்லிணக்கம், மனித உரிமைகள் பிரச்சினைகள் மற்றும் தனிப்பட்ட சுதந்திரங்களைப் பற்றியே பேசியதாகவும் தெரிவித்துள்ளார். #Islamicfundamentalist #GotabhayaRajapaksa #lasantha wickrematunge #californiacourt
1 comment
கோத்தபாய ஆட்சிக்கு வந்தால்:
1.குடிமக்களைக் கண்காணிப்பார்.
2.புலனாய்வு சேவையை கட்டியெழுப்புவார்.
3.பாதுகாப்பு கட்டமைப்பை மீளக்கட்டியமைப்பார்.
4.சிறுபான்மை இனங்களின் வாக்குகள் இன்றி வெற்றி பெற முயற்சிப்பார்.
5.இஸ்லாமிய அடிப்படைவாதம், அச்சுறுத்தல் மற்றும் தீவிரவாதம் பரவுவதை தடுப்பார்.
6.இன நல்லிணக்கம், மனித உரிமைகள் மீறல்கள், தனிப்பட்ட சுதந்திரம் என்பன பற்றி பேச மாட்டார்.
7.தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை கொடுக்காமல் பொருளாதார மேம்பாட்டை தீர்வாக திணிப்பார்.
8.தமிழ் பேசும் மக்கள் கௌரவமாக வாழ்வதற்கான சூழலை அநேகமாக உருவாக்கிக் கொடுக்க மாட்டார்.