இலங்கை பிரதான செய்திகள்

குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய வாகனங்கள் மீட்பு?

சாய்ந்தமருது தாக்குதலுக்கு உதவி – சந்தேகத்தில் வான் ஒன்று புளியம்குளத்தில் பறிமுதல்..

சாய்ந்தமருது பகுதியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்திற்கு வெடிபொருட்களை எடுத்துச் செல்ல உதவியதாக சந்தேகிக்கும் வான் ஒன்றினை காவற்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மரதங்கடவொல, இகல புளியம்குளம் பகுதியில் வைத்து குறித்த வேன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 250-5680 என்ற இலக்கத்தை உடைய வேன் ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வான் கெகிராவ காவற்துறை நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி கண்டுபிடிக்கப்பட்டது
தொடர் வெடிப்புச் சம்பவங்களுடன் தேடப்பட்டுவந்த லொறி ஒன்று பொலன்னறுவை, சுங்காவில பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த லொறியுடன் 3 சந்தேகநபர்களும் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
EP – PX 2399  என்ற இலக்கத் தகடு கொண்ட லொறி ஒன்றே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. #Eastersundayattackslk #srilanka #Sainthamaruthu

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.