நான்கு பெண் மனித உரிமை செயற்பாட்டாளர்களை சவூதி அரேபிய அரசு தற்காலிகமாக விடுதலை செய்துள்ளது. கடந்த வருடம் 11 பெண் செயற்பாட்டாளர்கள் சவூதியில் கைது செய்யப்பட்ட நிலையில் ஏற்கனவே 3 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹதூன் அல் பாஸி, அமல் அல் ஹர்பி, மைசா அல் மைன், அபீர் நமன்கானி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியவினை தலைமையகமாக கொண்ட சவூதி மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ள போதும் சவூதி அதிகாரிகள் இன்னும் இதனை உறுதிபடுத்தவில்லை.
சர்வதேச சமூகம் கொடுத்த அழுத்தத்தின் காரணமாக இவர்கள் விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தேசிய நலனுக்கு குந்தகம் விளைவித்த காரணத்திற்காக இந்த 11 பேரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்த சவூதி அரசு இவர்கள் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு வைத்து இருந்ததற்காக தெரிவித்திருந்தது.
சிறையில் தாங்கள் சித்திரவதைகள் சந்தித்ததாகவும், பாலியல் ரீதியாக துன்புறத்தப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவர்களில் சிலர் நீதிமன்றில் தெரிவித்திருந்த போhதிலும் சவூதி அரசு அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#saudiarabia #release #Humanrightsactivists