Home இந்தியாதிரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

திரிபுராவில் 168 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு

by admin


திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டதால், மறுவாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்கு திரிபுரா மேற்கு பாராளுமன்றத் தொகுதியில் கடந்த மாதம் 11ம் திகதி நடைபெற்ற தேர்தலில் 81 சதவீத வாக்குகள் பதிவாகிய நிலையில் வாக்குப்பதிவின்போது பல்வேறு வாக்குச்சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், கள்ள வாக்கு போடப்பட்டதாகவும், பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும் காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் ஆணையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து ;, சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளிடம் தேர்தல் ஆணையகம் விசாரித்து, அறிக்கை பெற்றது. அதில், திரிபுரா மேற்கு பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 26 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 168 வாக்குச்சாவடிகளில் முறைகேடு நடைபெற்றமை உறுதிசெய்யப்பட்டதனையடுத்து குறித்த 168 வாக்குச்சாவடிகளிலும் இடம்டபெற்ற வாக்குப்பதிவு செல்லாது என அறிவித்துள்ள தேர்தல் ஆணையகம் இந்த வாக்குச்சாவடிகளில் எதிர்வரும் 12-ம் திகதி மறுவாக்குப்பதிவு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

 #reelection #tripura

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More