Home உலகம்நமிபியாவில் அவசரநிலை சட்டம் அமுல்

நமிபியாவில் அவசரநிலை சட்டம் அமுல்

by admin

தென்மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான நமிபியாவில் கடுமையான பஞ்சம் நிலவுவதால் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.  சுமார் 25 லட்சம் மக்கள் வாழ்கின்ற நமிபியா நாட்டில் தனிநபர் வருமானத்திலும் பொருளாதாரத்திலும் மிகவும் பின்தங்கிய நிலையில் பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் கடுமையான பஞ்சம் பசி மற்றும் பட்டினியினை எதிர்நோக்குவருவது வழமையாகும்

அந்தவகையில், இந்த ஆண்டும் போதிய அளவில் பருவமழை பெய்யாததால் மக்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக அவசரநிலை சட்டத்தை அந்நாட்டின் ஜனாதிபதி ஹகே ஜிய்ன்கோப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

#emergencylaw #namibia

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More