குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாடு பூராகவும் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக டெங்கு நோய் பரவும் அபாயம் தோற்றம் பெற்றுள்ள நிலையில் டெங்கு நுளம்பு அதிகரிப்பை தடுக்கும் விதத்தில் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய நீர் நிலைகள் மற்றும் நீர் தேங்கியுள்ள பிரதேசங்களை அடையாளப்படுத்தும் பணிகள் இன்றைய தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார பணிமனை ஊழியர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்கள் தலைமையில் இடம் பெற்றது.
மன்னார் நகர எல்லைக்கு உற்பட்ட பல்வேறு கிராமங்கள் ,பொது இடங்கள் ,அரச அலுவலகங்களில் குறித்த அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றது.
அதன் அடிப்படையில் டெங்கு நோய்கள் பரவுவதற்கான ஏதுவான வாய்புக்கள் காணப்படும் வீடுகளின் உரிமையளர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படுவதுடன் உடனடியாக குறித்த நுளம்பு பெருக்கத்திற்கு ஏதுவாக காணப்படுகின்ற காரணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிக்கப்படுகின்றனர்.
அதே நேரத்தில் குறித்த கட்டளைகளை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் இடம் பெறுகின்றமையும் குறிப்பிடதக்கது.
#mannar #dengu #mosquito