சுமார் 60 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான, அமெரிக்க பொருட்களுக்கு அடுத்த மாதம் முதல் வரி விதிக்கவுள்ளதாக சீனா அறிவித்துள்ளதனையடுத்து இரு நாடுகளுக்குமிடையிலான வர்த்தகப் போர் மேலும் அதிகரித்துள்ளது
200 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா வரியை இரட்டிப்பாக அதிகரித்து 3 நாட்களின் பின்னர் சீனாவும் இவ்வாறு அதிகரித்துள்ளது.
தமது இறக்குமதிகள் மீதான வரியை அதிகரிக்க வேண்டாம் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனாக்கு எச்சரித்திருந்த நிலையில், அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என, சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் யேங் {வாங் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கிடையே நடைபெற்ற வர்த்தகக் கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#US #China #tradewar #அமெரிக்கா #சீனா