அமெரிக்க கணினி வலையமைப்புக்களை வெளிநாட்டு எதிரிகளிடமிருந்து பாதுகாக்கும் வகையில் அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தேசிய அவசரகாலநிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார்.
மேலும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய வெளிநாட்டுத் தொடர்பாடல்களை உள்நாட்டு நிறுவனங்கள் பயன்படுத்துவதைத் தடுக்கும் வகையிலான நிறைவேற்று ஆணையொன்றிலும் ட்ரம்ப் கைச்சாத்திட்டுள்ளார்.
எனினும், குறித்த நிறுவனங்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்ற போதிலும் சீன தொடர்பாடல் ஜாம்பவான் என அறியப்படும் நிறுவனமொன்றை இலக்கு வைத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொடர்பாடல் சாதனங்கள் ஊடாக சீனா உளவு பார்க்கக்கூடும் என அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் அச்சம் வெளியிட்டிருந்த நிலையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
இதேவேளை தமது தயாரிப்புக்கள் எவ்வித அச்சுறுத்தல்களும் அற்றது என சீனா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
#அமெரிக்கா #தேசியஅவசரகாலநிலை #பிரகடனம் #NationalEmergencyDeclaration #UnitedStates #trump