ஒருநாள் சேவை மூலம் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைதருவோரின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாகவே இந்த நிலைமை தோன்றியுள்ளதாக, பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார். இதன்படி, ஒருநாள் சேவைக்காக வருகைதருவோரின் எண்ணிக்கை 2,500 வரை அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கு முன்னர் ஒருநாள் சேவையைப் பெற்றுக்கொள்ள வருவோரின் எண்ணிக்கை 1,200 ஆக காணப்பட்டுள்ளது.
அடையாள அட்டையை பெற்றுக்கொள்வதற்காக வருவோரின் தொகை 2 மடங்காக அதிகரித்துள்ளமையால் மேலதிக அதிகாரிகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.#deparmentforregistrationofpersons #nationalidentity card