உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது

சீன பெருநிலப்பரப்பில், இணைய என்சைக்லோபீடியாவான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக விக்கிபீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தங்களுக்கு அறிவித்தல் எதுவும் வழங்கப்படவில்லை எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகப்புத்தகம் , ருவிட்டர் உட்பட நூற்றுக்கணக்கான வலைதளங்கள் சீன அதிகாரிகளால் முடக்கப்பட்டுள்ளதுடன் சீன மொழி விக்கிபீடியா தளத்தை 2015ஆம் ஆண்டிலிருந்து பயனர்கள் பயன்படுத்த முடிவதில்லை என்னும் நிலையில் தற்போது இவ்வாறு விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது

எவராலும் பக்கங்களை உருவாக்க, திருத்தம் செய்ய வழியுள்ள விக்கிபீடியாவை 2017-ம் ஆண்டு துருக்கி தடை செய்திருந்ததுடன் இந்த ஆண்டு வெனிசுவேலாவிலும் இடைக்கிடை இந்த தளம் முடக்கப்படுகின’றமை குறிப்பிடத்தக்கது

 #Wikipedia #blocked #China #சீனா  #விக்கிபீடியா #என்சைக்லோபீடியா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link