153
ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமான தளங்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீரில் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைந்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபோரா விமானப்படை தளங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து விமானப்படை தளத்திற்குள்ளும், அதனை சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love