Home இந்தியாசென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் அணை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

by admin

சென்னை அருகே பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக இந்த அணை அமைந்துள்ளது.

இந்த அணையில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவையான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் வழமையை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் மிகவும் குறைந்துவிட்டதுடன் பல நீர்நிலைகள் வறண்டுவிட்டன.

இதனையடுத்து ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் நிறுவனம், கொசஸ்தலை ஆறு, பாலாறு, ஆரணி ஆறு உள்ளிட்ட ஆறுகளை 6 ஆண்டுகள் ஆய்வு செய்து 1987-ம் ஆண்டு தமிழக அரசுக்கு பரிந்துரையாக ஓர் அறிக்கை அளித்தது.

இந்த ஆய்வின்போதே திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே கொசஸ்தலை ஆறு முகத்துவாரத்தில் இருந்து வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை ஒட்டிய காவேரிப்பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீற்றர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கை யான நீண்ட கால்வாய் வடிவில் அணை அமைந்திருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

#சென்னை   #பூமிக்கடியில் #அணை  #chennai

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More