191
2020-ஆம் ஆண்டு சூரியனின் வெளிப்பரப்பை ஆராய மிஷன் ஆதித்யா என்னும் திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் கே.சிவன் தெரிவித்துள்ளார். யுவிகா 2019 திட்டத்தின் கீழ் பயிற்சி பெறவுள்ள 108 மாணவ, மாணவிகளுடன் இஸ்ரோ தலைவர் கே. சிவன் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவண் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்துரையாடிய போதே இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
யுவிகா திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு நான்கு மையங்களில் இரண்டு வார காலத்திற்கு உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
# சூரியனின் #இஸ்ரோ #isro
Spread the love