இந்தியாவில் 17ஆவது பாராளுமன்றினை தேர்ந்தெடுப்பதற்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று 59 தொகுதிகளில் நடைபெறுகின்றது. அதனுடன், தமிழகத்தில் நான்கு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறுகின்றது
543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 11ஆம் திகதி ஆரம்பித்து நடைபெற்று வருகின்ற நிலையில் இதுவரை ஆறு கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்துள்ள நிலையில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
பிகார் , மத்தியப் பிரதேசம் , பஞ்சாப் , மேற்கு வங்கம்; , உத்தரப் பிரதேசம் , இமாசல பிரதேசம் மற்றும் சண்டிகரில் உள்ள 59 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகின்றது.
காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறும் அத் தேர்தலில் சுமார் 10.01 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 1 லட்சத்து 12 ஆயிரத்து 986 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் மொத்தம் 918 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து தமிழகத்தில் இன்று ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளுக்கு மறுவாக்குப்பதிவும் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
#india #parliamentelection #பாராளுமன்று #இறுதிக்கட்ட #வாக்குப்பதிவு #இன்று