ஒஸ்ரியாவின் வலதுசாரி சுதந்திர கட்சியின் அனைத்து அமைச்சர்களும் தமது பதவி விலகியுள்ளனர். ஒஸ்ரிய அமைச்சரவையில் 50 வீதமான அமைச்சுப் பொறுப்புக்களை வலதுசாரி சுதந்திரக் கட்சியினர் வகித்து வருகின்ற நிலையில் அவர்களில் வெளிவிவகார , பாதுகாப்பு, போக்குவரத்து, சமூக விவகாரம் உள்ளிட்ட அமைச்சுக்களின் அமைச்சர்கள் இவ்வாறு பதவி விலகியுள்ளனர்.
2017 இல் அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ரஸ்ய நிறுவனமொன்றுக்கு வழங்கும் திட்டம் காணொளியாக வெளியானதைத் தொடர்ந்து சுதந்திர கட்சியின் தலைவரும் நாட்டின் துணைப்பிரதமர் ஹெயின்ஸ் கட்டாயமாக பதவிவிலக வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து உள்விவகார அமைச்சர் கட்டாயத்தின் பேரில் பதவி விலக்கப்பட்டால் கட்சியின் அனைத்து அமைச்சர்களும் பதவி விலக நேரிடும் என சுதந்திர கட்சி எச்சரித்திருந்த நிலையில் உள்விவகார அமைச்சரை பதவி நீக்குமாறு அந்நாட்டுத் தலைவர் நேற்று அறிவித்துள்ளதனையடுத்து இவ்வாறு அமைச்சர்கள் பதவிவிலகியுள்ளனர்.
இந்நிலையில், புதிய தேர்தல் இடம்பெறக்கூடும் என வலதுசாரி மக்கள் கட்சியின் தலைவரும் ஒஸ்ரிய நாட்டுத்தலைவருமான செபஸ்தியன் குர்ஸ் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#ஒஸ்ரியா #வலதுசாரிசுதந்திரகட்சி #austria #ministers #resign