Home உலகம்பிரித்தானிய பிரதமர் பதவிக்கு பலர் போட்டி

பிரித்தானிய பிரதமர் பதவிக்கு பலர் போட்டி

by admin


பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அடுத்த மாதம் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ள நிலையில், கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்னும் பதவிக்கு போட்டி ஆரம்பமாகியுள்ளது. இதுவரை நான்கு வேட்பாளர்கள் இப்பதவிக்காக போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.

வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரிமி ஹண்ட் , சர்வதேச மேம்பாட்டுதுறை செயலாளர் ரோரி ஸ்டூவார்ட் , முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் போரிஸ் ஜோன்சன் , முன்னாள் வேலை மற்றும் ஓய்வூதிய செயலாளர் எஸ்தர் மேக்வே ஆகியோரா இவ்வாறு போட்யிடுவது உறுதியாகியுள்ள போதிலும் மேலும் பலர் போட்டியிட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதில் யார் வெற்றி பெறுகின்றாரோ அவர்கள் கட்சியின் தலைவராக மட்டுமின்றி பிரித்மானியாவின் அடுத்த பிரதமராகவும் பதவி ஏற்பார் என்பதுடன் எதிர்வரும் ஜூலை மாத இறுதிக்குள் அடுத்த தலைவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பித்தவர்கள் இறுதியில் இரண்டு நபர்களாக குறைக்கப்பட்டு ஜூலை மாதம், அனைத்து கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது குறிப்பி;டத்தக்கது

#பிரித்தானிய  #பிரதமர்  #பதவி  #தெரேசா மே #uk #theresa may

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More